Home »
-வை.கோ
,
இந்தியா
,
ஈழத்தமிழ்
,
உடந்தை
,
சுத்திகரிப்புக்கு
» ஈழத்தமிழ் இனச் சுத்திகரிப்புக்கு இந்தியா உடந்தை -வை.கோ
ஈழத்தமிழ் இனச் சுத்திகரிப்புக்கு இந்தியா உடந்தை -வை.கோ
Written By Eve on Wednesday, October 5, 2011 | 11:44 PM
தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் இனவாத கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,தமிழ் மக்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. திட்டமிட்ட வகையில் தமிழ் சமூகத்தை அரசாங்கம் ஒடுக்கி வருகிறது.தமிழர்களின் மரபு நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.இந்த இனவாத அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கி வருகிறது.இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மத்திய அரசாங்கங்களின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழக்குத் தொடர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்திய மத்திய அரசாங்கத்தின் துரோகச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment