Home »
அதற்கு
,
உயிருக்காக
,
உயிர்களை
,
குவித்தீர்களே
,
கொன்று
,
பதில்?
» ஒரு உயிருக்காக பல உயிர்களை கொன்று குவித்தீர்களே அதற்கு என்ன பதில்?
ஒரு உயிருக்காக பல உயிர்களை கொன்று குவித்தீர்களே அதற்கு என்ன பதில்?
Written By Eve on Sunday, October 2, 2011 | 8:30 AM
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்களர்கள் தூக்கில் போடப்பட்டால் நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்திய மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டும், மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 02.10.2011 அன்று சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.இந்த உண்ணாவிரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்:-தமிழகத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவும், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தவும், இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் உண்ணாவிரத அறப்போராட்டம் அண்ணன் நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.நரேந்திரமோடிக்கு தீர்ப்பு வந்தபோது கூட, பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பி கொண்டாடினர். இது தவறு இல்லையா. ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம்.தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.ஜனாதிபதி தனியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ, அதைத்தான் ஜனாதிபதி செய்வார். இதற்கு பின்னால், சோனியா இருந்து இயக்குகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு இம்மியளவும் நகராது. மத்திய அவர்களை தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று சொன்னால், தமிழக அரசு அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்புவார். நிராகரித்த மனுவை திரும்ப ஏற்பதில் ஜனாதிபதிக்கு எந்த தடையும் கிடையாது. அதனால் தமிழக அரசு இந்த மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முன்வர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிய வைகோ, இந்த உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை தந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று மாலை வரை பிரச்சாரத்திற்கு போகவேண்டாம். உண்ணாவிரதம் முடியும்வரை இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment