Home »
காணாமற்
,
சரணடைந்த
,
தொகுதியினர்
,
புலிகளில்
,
போயுள்ளனர்?
» சரணடைந்த புலிகளில் ஒரு தொகுதியினர் காணாமற் போயுள்ளனர்?
சரணடைந்த புலிகளில் ஒரு தொகுதியினர் காணாமற் போயுள்ளனர்?
Written By Eve on Sunday, October 2, 2011 | 3:05 AM
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலிகளில் ஒரு தொகுதியினர் காணாமற் போயுள்ளனர்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தவர்களில் இன்னும் 900 பேர் மட்டுமே விடுவிக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இறுதி யுத்தத்தின் போது 11ஆயிரத்து 800 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர் என்றும் இவர்களில் 8ஆயிரத்து 240 விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு அமைச்சு உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.புனர்வாழ்வு மறுசீரமைச்சின் கணக்குப்படி 3560 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும். இவர்களில் 1700பேரை நேற்று அலரி மாளிகையில் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.மிகுதி 1740பேர் புனர்வாழ்வு மறுசீரமைப்பு ஆரம்பத்தில் தெரிவித்த கணக்கின் படி தடுப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 900பேர் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. அவ்வாறானால் 840 போராளிகளுக்கு என்ன நடந்தது?அரசாங்கத்தின் கணக்குப்படி 9940பேரை இதுவரை விடுதலை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அப்படியானால் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் 1740பேர் மிகுதி இருக்க வேண்டும். ஆனால் 900பேர் மட்டுமே தங்களிடம் இருப்பதாக அரசாங்கம் கூறும் நிலையில் ஏனையோரின் கதி என்னவானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment