Headlines News :

Meenakam News World

Home » , , , » அடிப்படை உரிமைகளைக் கூட எட்ட முடியாதுள்ள தமிழர்கள்

அடிப்படை உரிமைகளைக் கூட எட்ட முடியாதுள்ள தமிழர்கள்

Written By Eve on Saturday, September 24, 2011 | 11:34 AM

வடக்கு,தெற்கு என அரசு மக்களை வேறுபடுத்திப் பார்க்கிறது. இதன் காரணமாகத் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கூட எட்ட முடியாத நிலையில் உள்ளனர். இவ்வறு வடபகுதிக்கு வந்த தேசிய சமாதானப் பேரவையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நல்லூர் சென். ஜேம்ஸ் தேவாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. தேசிய சமாதானப் பேரவையின் குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல சமய, சமூக பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கும் யாழ். மாவட்ட சமய, சமூகப் பெண்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போதே யாழ். மாவட்டப் பிரதிநிதிகளால் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டது.நான்கு குழுக்களாகப் பிரிந்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குழுக்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பின்னர் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக பிரதேசங்களில் பொறுப்பாக உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தச் சட்டம் நீக்கப்பட்டதன் விளைவை மக்கள் அனுபவிக்கவில்லை. சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த அரசு இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறது. யுத்த காலத்தில் இடம்பெற்ற வடு இன்னமும் நீங்கவில்லை. யுத்தத்தின் விளைவு பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. அவர்கள் வருமானத்துக்கு வழிவகைகள் இன்றியுள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் இவ்வாறு உள்ளனர்.யுத்த காலத்தில் இராணுவத்தால் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கிறீஸ் மனிதன் தொடர்பாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரிடம் சொல்லி முறையிடுவது எனத் தெரியாத நிலையில் அவர்கள் கிறீஸ் மனிதனுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருப்பதாகவே மக்கள் நம்புகின்றனர். கிராமங்கள் தோறும் சந்திக்குச் சந்தி இராணுவ முகாம்கள் இருக்கும்போது எப்படி கிறீஸ் மனிதர்களால் சுதந்திரமாக நடமாட முடிகிறது. கிறீஸ் மனிதனை மக்கள் பிடித்தால் இராணுவம் அங்கு வந்து அவனை விடுவிக்கிறது எனவும் மக்கள் கூறுகின்றனர்எனச் சமாதானப் பேரவையிடம் சுட்டிக்காட்டப்பட்டது.இதேவேளை தேசிய சமாதானப் பேரவையினர் நேற்று பிற்பகல் யாழ் நகரில் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறியுள்ள பகுதிக்கும் நேரில் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger