மேலும் அவர் தெரிவிக்கையில்:
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஊர்தி பிரசாரப் பய ணத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இரண்டே இரண்டு விடயங்களைச் சொல்ல வேண்டும் என்பதால்தான், இங்கே வந்திருக்கிறேன். ஒன்று பாராட்டு. இன்னொன்று எச்சரிக்கை.
தமிழகம் முழுவதும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழர்கள் கிளர்ந்து எழுந்த போது, செங்கொடி தீக்கிரையான போதும் மக்களுடைய போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது புற அழுத்தங்கள் கிளம்பக் கிளம்ப மக்கள் வீதியில் வந்து போராடிக் கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஒரு போராட்டம் நடத்தியெ ஆக வேண்டும் என்று நீதிமன்றத்தின் வாயிலாக இந்தத் தூக்குத்தண்டனையை எட்டு வார காலத்திற்கு தடை வாங்கித் தந்த மரியாதைக்குரிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, இந்தக் கூட்டத்தின் வாயிலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டியே ஆக வேண்டும்.
ஏனென்றால், புற அழுத்தங்களால் அந்தப் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண் டிருந்தாலும், தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரு செய்தி, தோழர்கள் வடிவாம்பாள், அங்கையர் கன்னி, சுஜாதா போன்றவர்கள் அன்றைக்கு உண்ணாவிரதம் இருந்தார்கள்.எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி, எட்டு வார காலத்திற்குத் தடை என் பதுதான். அதற்கு முழு முதற் காரணம் வைகோவைத்தான் சாரும். ஆகையால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகிறோம் என்றார்.
No comments:
Post a Comment