இராணுவத்தினரை அடைத்துவைத்த வீரப் பெண்கள்
Written By Eve on Tuesday, September 6, 2011 | 9:03 PM
பெண்களுடன் சேட்டை புரிய முனைந்த இராணுவத்தினரைக் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது :நேற்றிரவு கோப்பாய் மத்தி சூசையப்பர் ஆலயப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள இளம் பெண்களிடம் 4 இராணுவத்தினர் சேட்டை விட முயன்றுள்ளனர்.உடனடியாக அப் பெண்கள் 3 இராணுவத்தினரை தமது வீட்டுனுள் அடைது வைத்துள்ளதுடன் அவர்கள் பயனித்த துவிச்சக்கரவண்டியையும் பறிமுதல் செய்தனர்.மற்றைய இராணுவத்தினரை அனுப்பி உங்கள் இராணுவ பொறுப்பாளரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த இராணுவ பொறுப்பாளரை எச்சரிக்கை செய்து விடுதலை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment