கிளிநொச்சியில் சிறுவனைக் காணவில்லை
Written By Eve on Tuesday, September 6, 2011 | 6:31 AM
கிளி நொச்சி மாவட்டத்தில் மாணவன் ஒருவரை கானவில்லை. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்ற சிறுவனே காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் 24 ஆம் திகதி காணாமல்போன சிறுவன் 14 நாட்கள் கழிந்தும் வீடு திரும்பவில்லை எனச் சிறுவனின் தாயார் முறையிட்டுள்ளார்.கிளிநொச்சி பொன்னகர் மத்தியில் வசிக்கும் 15 வயதுடைய கணேசன் பிரதீபன் என்ற சிறுவனே காணாமல் போனவராவார்.இது தொடர்பாக கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுவர் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச் சிறுவனைக் கண்டுபிடிப்பது தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment