தமிழினியின் தடுப்பு மீண்டும் நீடிப்பு
Written By Eve on Monday, September 12, 2011 | 8:05 AM
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணிப் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினியின் தடுப்புக்காவல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதம நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டது.தமிழினிக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் எவ்வித ஆலோசனைகளும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிவானிடம் தெரிவிதத்தையடுத்தே இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment