Headlines News :

Meenakam News World

Home » , , , , , » செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?

செய்த தவறுகளுக்கு இந்தியா பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுமா?

Written By Eve on Monday, September 12, 2011 | 10:25 PM

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது மாநாடு இலங்கைத் தமிழரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கை கிடையாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு சிறு அளவிலான அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தால் பிரயோகிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்நிலையில் மேற்படி மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்திலிருந்து கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்வுகள் கூறப்படுகின்றமை தொடர்பில் விளக்கும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கை விவகாரம் தொடர்பில் குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள், தீர்வுகள் மற்றும் நலனோம்புகை உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இலங்கைத் தமிழர்கள் ஐக்கிய நாடுகளிடம் பாரிய நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அதே போல் மனித உரிமைகள் விடயத்திலும் அந்த நம்பிக்கை இருக்கின்றது. இருந்த போதிலும் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கைத் தமிழருக்கு சாதகமானதொரு நிலைப்பாடு எட்டப்படும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

ஏனெனில் உண்மைகளைக் கண்டறிவதற்கென ஸ்தாபிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதமே வெளி வரவிருக்கின்றது. அந்த அறிக்கை இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால் அதன் பின்னரே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உணர முடியும்.

ஜெனீவா பேரவையில் இலங்கைத் தமிழர் தொடர்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகளில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். இது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. எனினும் எதிர்பார்க்கும் அளவுக்கு எதுவும் நடந்துவிடாது என்பதுதான் உண்மையாகும் என்றார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger