Home »
அறிக்கை
,
சமர்ப்பிக்க
,
தெரிவிப்பு
,
பிளேக்கிடம்
,
மாட்டோம்:மஹிந்த
,
ஜெனீவாவில்
» LLRC அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்க மாட்டோம்:மஹிந்த பிளேக்கிடம் தெரிவிப்பு
LLRC அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்க மாட்டோம்:மஹிந்த பிளேக்கிடம் தெரிவிப்பு
Written By Eve on Monday, September 12, 2011 | 10:26 PM
மஹிந்தவுக்கும் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கும் இடம்பெற்ற சந்திப்பில் மஹிந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்கபப்டமாட்டாது என கூறியுள்ளார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடுப்பகுதியில்தான் அது வெளியாகும் எனவும் கூரியுள்ளார்.அந்த அறிக்கையின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மஹிந்த உறுதியளித்துள்ளாராம். தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்ததுடன் இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடைபெறும் எனவும் மஹிந்த கூறியுள்ளார்.
வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளெக் தெரிவித்த கருத்தை மஹிந்த நிராகரித்துள்ளார். ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றது. இது ஏனைய நாடுகளை போன்றே அது தேவையெனவும் மஹிந்த கூறியுள்ளார்.இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள ரொபட் ஓ. பிளெக் அரச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது. யாழிலிருந்து கொழும்பு திரும்பும் ரொபட் ஓ. பிளெக் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
Labels:
அறிக்கை,
சமர்ப்பிக்க,
தெரிவிப்பு,
பிளேக்கிடம்,
மாட்டோம்:மஹிந்த,
ஜெனீவாவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment