Headlines News :

Meenakam News World

Home » , , , , , » தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடும் அமைச்சர் ஜொன்ஸ்டன்

தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடும் அமைச்சர் ஜொன்ஸ்டன்

Written By Eve on Friday, September 30, 2011 | 2:57 AM

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு தமிழ் வர்த்தகர்களிடமிருந்து கப்பம் அறவிடும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக அறியக்கிடைத்துள்ளது.அதற்கென அவர் தனக்கு நெருக்கமான இரண்டு தமிழ் வர்த்தகர்களை பயன்படுத்திக் கொள்வதுடன், அவர்கள் மூலமாக தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரஸ்தாப வர்த்தகா;கள் இருவருக்கும் கப்பம் பெறும் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு, அவர்களின் தொலைபேசி இலக்கத்தைக் கண்டு பிடிக்கமுடியாத வகையிலான சீ.எல்.ஆர். வசதி கொண்ட இரண்டு தொலைபேசிகளையும் அமைச்சர் வழங்கியுள்ளார்.

அமைச்சரின் சகாக்களின் கப்பம் கோரல்கள் குறித்த முறைப்பாடுகள் தற்போது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச’வின் காதுகளுக்கு எட்டியுள்ள நிலையில் பிரஸ்தாப வர்த்தகர்கள் இருவரும் பாதுகாப்புத் தரப்பினரால் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger