Home »
இடையில்
,
இந்தியா
,
இலங்கையுடன்
,
திடீரென
,
நிறுத்தியது
,
பயிற்சியை
,
போர்ப்
» இலங்கையுடன் போர்ப் பயிற்சியை இடையில் திடீரென நிறுத்தியது இந்தியா
இலங்கையுடன் போர்ப் பயிற்சியை இடையில் திடீரென நிறுத்தியது இந்தியா
Written By Eve on Friday, September 23, 2011 | 2:39 AM
இந்திய இலங்கைக் கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான நேற்றுடன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வருவதாக இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ஆம் திகதி தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.நேற்றைய தினம் திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக இலங்கை அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப் பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இன்னமும் வெளியிடப்படவில்
Labels:
இடையில்,
இந்தியா,
இலங்கையுடன்,
திடீரென,
நிறுத்தியது,
பயிற்சியை,
போர்ப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment