Headlines News :

Meenakam News World

Home » , , , , , » வடக்கில் கைவிடப்பட்ட வாகனங்களின் என்ஜின்கள் காணாமல் போயுள்ளன

வடக்கில் கைவிடப்பட்ட வாகனங்களின் என்ஜின்கள் காணாமல் போயுள்ளன

Written By Eve on Thursday, September 22, 2011 | 11:07 AM

யுத்த காலத்தில் பொதுமக்களினால் கைவிடப்பட்ட வாகனங்களின் என்ஜின்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாதுகாப்பு தேடி போர் சூனிய வலயங்களுக்கு தப்பிச் சென்ற மக்களின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சுமை ஊர்திகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களை அந்த மக்களுக்கு மீண்டும் வழங்குவதாக அரசாங்கம் கூறிய போதிலும், அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இராணுவத்தினர் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பல வாகனங்களில் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய உதிரிப்பாங்கள் காணாமல் போயுள்ளதுடன், உரிய ஆவணங்களை சமர்பித்து, தமது அடையாளத்தை உறுதிப்படுத்திய போதிலும், தமது வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச செயலகம் மற்றும் இராணுவ முகாம்களில் வாகனங்களுக்கான ஆவணங்களை வழங்கிய நிலையில், அவை மீண்டும் வழங்கப்படாது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமக்கு சொந்தமான வாகனங்களில் இலக்க தகடுகள் மாற்றப்பட்டு அவை இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger