Headlines News :

Meenakam News World

Home » , , , , , » கனரக ஆயுதம் பாவிக்கப்பட்தை பசில் ஒத்துக்கொண்டுள்ளார்: ரொபேர்ட் ஓ பிளேக்

கனரக ஆயுதம் பாவிக்கப்பட்தை பசில் ஒத்துக்கொண்டுள்ளார்: ரொபேர்ட் ஓ பிளேக்

Written By Eve on Monday, September 5, 2011 | 3:12 AM

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றினுள் 8மணியளவில் மலசலகூடத்தின்மேல் மர்ம மனிதனொருவன் ஏறி உட்கார்ந்திருந்துள்ளான்.வீட்டிலிருந்த பெண்ணொருவர் காயப்போட்ட உடுப்பை எடுக்கச் சென்றுள்ளார். இதனால் சுதாகரித்துக் கொண்ட மர்ம மனிதன் அங்கிருந்து பாய்ந்து ஓடியுள்ளான். பின்னார் அங்கு வந்த இராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மக்களை அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

யாழ்.உடுவில் பகுதியில் நேற்றிரவும் மர்மமனிதன் நடமாட்டம் இருந்தமையினால் கிராமத்தில் நேற்றும் பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும், வீடுகளில் ஆண்கள் தூக்கமின்றி விழித்திருந்ததாகவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உடுவில் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்மமனிதன் நடமாட்டம் தொடர்பான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நேற்றிரவும் (ஞாயிறு) டச்சுவீதியில் உள்ள சில வீடுகளினுள் மர்மமனிதர்கள்; 9மணியளவில் நுழைய முற்பட்டுள்ளனர். எனினும் வீட்டின் உரிமையாளர்கள் கண்டு துரத்தியபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளான்,

இதேவேளை இரவு 8.45 மணிதொடக்கம் 9.00 மணிவரைக்கும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததோடு நீண்டநேரம் தரித்து நின்றதாகவும் தெரிவித்த மக்கள் இராணுவத்தினர் அங்கிருந்து சென்று சில நிமிடங்களில் வாகனமொன்று முன்னுக்கும் பின்னுக்கும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புடன் வந்ததாகவும் அதிலிருந்து 7பேர் வரையில் இறங்கியதாகவும் தெரிவித்ததோடு இவர்களே மர்ம மனிதர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வீடுகளில் உள்ள ஆண்கள் பொல்லுகளுடன் விடியும் வரை விழித்திருக்கும் முடிவில் இருந்தனர் எனவும் பெண்கள் பாதுகாப்பாக வீடுகளினுள் இருந்ததாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு

உடுவில் ஆலடிப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மர்ம மனிதனைத் துரத்திச் சென்றவர்களையும் வீடுகளிலிருந்த பெண்களையும் படையினர் தாக்கியதாகவும் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடுவில் ஆலடிப் பகுதியில் அரைக்கும் ஆலையொன்றுக்கு அருகே சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;

இப்பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருவர் எட்டிப் பார்ப்பதை அவதானித்தவர்கள், அயலவர்களைத் திரட்டிக்கொண்டு அந்த இருவரையும் பிடிக்க முனைந்த போது, அதிலொருவர் பிரதான வீதிப் பக்கமாகவும் மற்றவர் அருகிலுள்ள இராணுவ காவலரண் பக்கமாகவும் ஓடியுள்ளனர். எனினும் இருவரையும் இவர்களால் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்ட போது, சில வீடுகளுக்குள் மர்ம மனிதர்கள் புக முற்பட்ட வீடுகளிலிருந்தவர்கள் அவலக் குரலெழுப்பவே மர்ம மனிதர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.

பாதுகாப்பிற்காகப் பலரும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே திரண்டு நின்ற போது அப்பகுதிக்கு ஜீப்களிலும் துவிச்சக்கர வண்டிகளிலும் வந்த படையினர் அங்கு நின்றவர்களைப் பொல்லுகள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

வீடுகளுக்கு வெளியே நின்றவர்களைத் தாக்கி வீடுகளுக்குள் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்குதலுக்குள்ளானதுடன் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மூவரைக் கைது செய்த படையினர் அவர்களை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கவே அவர்களை மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்த போது மூவரையும் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யாழ் உடுவில் பிரதேசத்தில் மர்ம மனிதர் நடமாட்டத்தினால் பதற்றம்! மக்கள் இரவிரவாக விழித்திருப்பு
யாழ்.உடுவில் பகுதியில் நேற்றிரவும் மர்மமனிதன் நடமாட்டம் இருந்தமையினால் கிராமத்தில் நேற்றும் பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும், வீடுகளில் ஆண்கள் தூக்கமின்றி விழித்திருந்ததாகவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உடுவில் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்மமனிதன் நடமாட்டம் தொடர்பான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நேற்றிரவும் (ஞாயிறு) டச்சுவீதியில் உள்ள சில வீடுகளினுள் மர்மமனிதர்கள்; 9மணியளவில் நுழைய முற்பட்டுள்ளனர். எனினும் வீட்டின் உரிமையாளர்கள் கண்டு துரத்தியபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளான்,

இதேவேளை இரவு 8.45 மணிதொடக்கம் 9.00 மணிவரைக்கும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததோடு நீண்டநேரம் தரித்து நின்றதாகவும் தெரிவித்த மக்கள் இராணுவத்தினர் அங்கிருந்து சென்று சில நிமிடங்களில் வாகனமொன்று முன்னுக்கும் பின்னுக்கும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புடன் வந்ததாகவும் அதிலிருந்து 7பேர் வரையில் இறங்கியதாகவும் தெரிவித்ததோடு இவர்களே மர்ம மனிதர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் வீடுகளில் உள்ள ஆண்கள் பொல்லுகளுடன் விடியும் வரை விழித்திருக்கும் முடிவில் இருந்தனர் எனவும் பெண்கள் பாதுகாப்பாக வீடுகளினுள் இருந்ததாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றினுள் 8மணியளவில் மலசலகூடத்தின்மேல் மர்ம மனிதனொருவன் ஏறி உட்கார்ந்திருந்துள்ளான்.

இதேவேளை வீட்டிலிருந்த பெண்ணொருவர் காயப்போட்ட உடுப்பை எடுக்கச் சென்றுள்ளார். இதனால் சுதாகரித்துக் கொண்ட மர்ம மனிதன் அங்கிருந்து பாய்ந்து ஓடியுள்ளான். பின்னார் அங்கு வந்த இராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் மக்களை அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

இரண்டாம் இணைப்பு

உடுவில் ஆலடிப் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மர்ம மனிதனைத் துரத்திச் சென்றவர்களையும் வீடுகளிலிருந்த பெண்களையும் படையினர் தாக்கியதாகவும் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடுவில் ஆலடிப் பகுதியில் அரைக்கும் ஆலையொன்றுக்கு அருகே சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;

இப்பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருவர் எட்டிப் பார்ப்பதை அவதானித்தவர்கள், அயலவர்களைத் திரட்டிக்கொண்டு அந்த இருவரையும் பிடிக்க முனைந்த போது, அதிலொருவர் பிரதான வீதிப் பக்கமாகவும் மற்றவர் அருகிலுள்ள இராணுவ காவலரண் பக்கமாகவும் ஓடியுள்ளனர். எனினும் இருவரையும் இவர்களால் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்த மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்ட போது, சில வீடுகளுக்குள் மர்ம மனிதர்கள் புக முற்பட்ட வீடுகளிலிருந்தவர்கள் அவலக் குரலெழுப்பவே மர்ம மனிதர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.

பாதுகாப்பிற்காகப் பலரும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே திரண்டு நின்ற போது அப்பகுதிக்கு ஜீப்களிலும் துவிச்சக்கர வண்டிகளிலும் வந்த படையினர் அங்கு நின்றவர்களைப் பொல்லுகள் மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

வீடுகளுக்கு வெளியே நின்றவர்களைத் தாக்கி வீடுகளுக்குள் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்குதலுக்குள்ளானதுடன் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மூவரைக் கைது செய்த படையினர் அவர்களை மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கவே அவர்களை மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்த போது மூவரையும் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger