Headlines News :

Meenakam News World

Home » , , , , , » வடக்கு லண்டன் டொடென்ஹாம் பகுதியில் கலவரம் (video in)

வடக்கு லண்டன் டொடென்ஹாம் பகுதியில் கலவரம் (video in)

Written By Eve on Sunday, August 7, 2011 | 10:37 AM

கறுப்பு இனமக்கள் அதிகம் வாழும் வடக்கு லண்டன் டொடென்ஹாம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைகளில் பல கட்டிடங்கள், வாகனங்கள், தீக்கிரையாக்கப்பட்டதுடன், அப்பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதும் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் காவல்துறையினர் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை அப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், இச்சம்பவத்தில் 29வயதான மார்க் டக்கன் என்ற கறுப்பு இன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் எதிரொலியாகவே நேற்றிரவு இப்பகுதியில் வன்முறைகள் வெடித்துள்ளன.
காவல்துறையினரின் வாகனங்கள், மற்றும் பிரயாணிகள் பேருந்து, மற்றும் பொது கட்டிடங்களுக்கும் ஆர்ப்பாட்டகாரர்கள் தீவைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த போதிலும் வாகனங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு உள்துறை செயலாளர் திரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நகர காவல்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நாசகார வேலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வன்முறை ஒரு போதும் பிரச்சினைக்கு தீர்வாக முடியாது என்றும் தலைமை அமைச்சர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலமை இப்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதிலும் இப்பகுதியில் பதற்றமான சூழலே காணப்படுவதாக நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு லண்டன் நகரான ரொட்டென்ஹாமில் வீதிகளில் அவசர சேவைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இன்று காலையிலும் கிரிமினல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
லண்டன் தீயணைப்புப்படையினர்  கட்டங்கள் எரிவதை அணைப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
தீ பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
‘ கடந்த இரவு ரொட்டன்ஙாமில் இடம்பெற்ற வன்செயலை கண்டிக்கின்றேன்’ என்று உள்துறைச் செயலாளர் திரேஸா மே தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுச் சொத்துக்களை அழிப்பது ஆகியனவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நகர காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவும் உண்டு என்றும் அவர் சொன்னார்.
ரொட்டன்ஹாம் கலவரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தலைமை அமைச்சரின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger