தமிழர்களின் பூர்விக நிலங்களை சிங்கள முதலாளிகளுக்கு கொடுத்த அரசு இப்போ அதில் பணிசெய்வதற்கும் சிங்கள தொழிலாலர்களையே நியமித்துவருகின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய கரைச்சி என்ற இடத்தில், றைகம் என்ற தனியார் நிறுவனத்திற்கு உப்பளத் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தமிழர், முஸ்லிம்கள் வசிக்கும் பெரிய கரைச்சி என்ற இடத்தில் உள்ள உப்பளத் தொழிற்சாலைக்கு தென்னிலங்கைப் பணியாளர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இங்கு 90 வரையான தமிழ் குடும்பங்களும் 20 முஸ்லிம் குடும்பங்களும் வசித்துவருகின்றனர். ஒருவர் கூட சிங்கள இனத்தைச்சேர்ந்தவர்கள் கிடையாது. மேற்குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பயனில்லை என்று சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் வாழ்வாதாரத் தொழிலை இழந்து கஷ்டப்படுகின்றன என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: பெரியகரைச்சிப் பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு அரசு தீர்மானித்திருப்பது தொடர்பான தகவல் கிடைத்ததும் நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து முறையிட்டேன்.அந்தச் சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் இருந்தார். உப்பளம் அமைக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று இருவரும் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த உறுதிமொழி கைவிடப்பட்டுவிட்டது.
.
இதற்குப் பின்னர் உப்பளம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது உப்பளம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிலாக இறால் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் இன்று தொழிலை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.அந்தக் குடும்பங்களுடன் உபதொழிலாக இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மேலும் 500 குடும்பங்களும் அவற்றின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் இன்று நிற்கின்றன. பெரியகரைச்சிப் பிரதேசத்தில் வசிப்போரில் 95 சதவீதத்திற்கு அதிகமானோர் தமிழர்களும் முஸ்லிம்களும் ஆவர்.தற்போது உப்பளத்தில் பணி புரிவதற்கென தென்னிலங்கையிலிருந்து ஆட்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்.
Home »
இருக்க
,
இன்றி
,
சிங்களவர்க்கு
,
தமிழர்
,
தமிழ்
,
தொழில்
,
பிரதேசத்தில்
,
வாய்ப்பு
» தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு
தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு
Written By Eve on Sunday, August 7, 2011 | 10:38 AM
Labels:
இருக்க,
இன்றி,
சிங்களவர்க்கு,
தமிழர்,
தமிழ்,
தொழில்,
பிரதேசத்தில்,
வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment