Headlines News :

Meenakam News World

Home » , , , , » மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Written By Eve on Sunday, August 7, 2011 | 10:39 AM

இடவசதி அமைத்துத் தருமாறு கோரி மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் செயற்பட்டுவரும் மட்டக்களப்பு தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவக மாணவர்கள் மற்றும் எச்.எச்.டி.ஏ. மாணவர்களும் இன்று காலைமுதல் கல்லூரிக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாயில் இப்போராட்டம் இடம் பெற்றது. சுமார் 400 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தனியாக வேறு கட்டடத் தொகுதியில் இயங்கவேண்டிய தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவகம் இடமின்மையால் நீண்ட காலமாக தொழில்நுட்ப கல்லூரியின் வகுப்பறைகளிலேயே இடம்பெற்று வருகின்ற போதிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாதென மாணவர்கள் தெரிவிக்கினறனர். இந்நிறுவகத்தில் 550 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது இந்நிறுவனத்திற்கென தாளங்குடாவில் அமைக்கப்பட்டுவரும் கட்டடத்தை பூர்த்திசெய்து தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார். ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger