Headlines News :

Meenakam News World

Home » , , , , » ஓட்டமாவடியில் பூரண ஹர்த்தால்: கடைகள் அலுவலகங்கள் இயங்கவில்லை

ஓட்டமாவடியில் பூரண ஹர்த்தால்: கடைகள் அலுவலகங்கள் இயங்கவில்லை

Written By Eve on Thursday, August 11, 2011 | 2:50 AM

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வர்த்தக நிலையங்கள் அரச அலுவலகங்கள் முற்றாக இயங்கவில்லை. வாழைச்சேனை, ஓட்டமாவடி ,நாவலடி உட்பட பல பிரதேசங்களின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நேற்று இடம் பெற்ற பொலிஸ் பொதுமக்கள் மோதலைத்தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்த ஹர்த்தாலை கல்குடா பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று மர்மமனிதன் எனப்படும் நபரொருவர் 31வயதுடைய பெண்ணின் கையைப்பிடித்து இழுத்ததைத்தொடர்ந்து ஏற்பட்ட முறுகலினால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே பாரிய மோதல்கள் ஏற்பட்டன. இதனால் 25 பொது மக்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகின்றது

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger