Headlines News :

Meenakam News World

Home » , , , , , » போர் முடிந்தும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது: வாசிங்டன் போஸ்ட்

போர் முடிந்தும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது: வாசிங்டன் போஸ்ட்

Written By Eve on Thursday, August 11, 2011 | 2:49 AM

போர் முடிந்தும் இருவருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழ் மக்கள் மிகவும் துன்பத்திலேயே வாழ்கின்றார்கள். மஹிந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல எதனையும் செய்யவில்லை. இவ்வாறு வாஷிங்ரன் போஸ்ட் கூறியுள்ளது.

மண்மூடைகள் சில அகற்றப்பட்டுள்லன. வீதி தடைகள்  சில அகற்றப்பட்டுள்லன. ஆனால் தமிழ் மக்கள் நிலங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பீதியிலேயே வாழ்கின்றார்கள். அவர்கள் போர் வடுக்களில் இருந்து  நீங்குவதற்கு  அதிகரித்த இராணுவ பிரசன்னம் ஒரு தடையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை.

முருகண்டியில் ஆசீர்வாதம் சூசை நாதர் என்கின்ற பாடசாலை அதிபர் தனது வீட்டை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் அவர் தனது பாடசாலை மற்றும் இருப்பிடத்தினை விட்டு 50 மைல்களுக்கு அப்பால் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்கின்றார்.

எனது வீட்டில் 106 தென்னை மரங்கள் இருக்கின்றது ஆனால் நான் தேங்காயினை கடையில் வாங்கவேண்டிய நிலை. ஏனென்றால் அங்கு போக முடியாது இராணுவம் எனது வீட்டினை ஆக்கிரமித்துள்லார்கள்.

விஸ்வலிங்க கோமதி என்கின்ற குடும்ப தலைவி தனது நகைகளை அடமானம் வைத்து வாழ்கின்ரார். அவரது வீடும் கிளி நொச்சியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் மகன்  போரின் போது காணாமல் போயுள்ளார். தனது மகனை மீட்கும் செலவிற்காக தனது நகைகளை அடமானம் வைத்துள்ளார். எனக்கு எனது வீடு வேண்டும் அது எனது உரிமையும் கூட என்கின்ரார் 52 வயதாகும் கோமதி.

நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகளை இராணுவம் பலாத்காரமாக வைத்திருக்கின்றது. அவற்றினை திருப்பிக்கொடுக்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் நிரந்தரமாகவே இருக்கப்போகின்றது என அச்சம் தெரிவித்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger