Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மஹிந்தவுக்கு எதிரான சமன் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப ஆலோசனை

மஹிந்தவுக்கு எதிரான சமன் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப ஆலோசனை

Written By Eve on Wednesday, August 3, 2011 | 10:35 AM

அமெரிக்காவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த இராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது.ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை  திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது.

ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக   முன் நாள் சட்ட மா அதிபர் புரூஸ்பெயின்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் அச்சு ஊடகங்களில் அந்த ஆட்கொணர்வு மனுவை பிரசுரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டுவருவதாக புரூஸ்பெயின் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கில் கோத்தபாய இராஜபக்‌ஷவையும் குற்றவாளியாக சேர்க்கப்போவதாக கூறினார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger