Home »
இராஜபக்ஷ
,
இலங்கைக்கு
,
சூடான்
,
நிலமைதான்
,
வரும்:
,
விஜயதாஸ
» சூடான் நிலமைதான் இலங்கைக்கு வரும்: விஜயதாஸ இராஜபக்ஷ
சூடான் நிலமைதான் இலங்கைக்கு வரும்: விஜயதாஸ இராஜபக்ஷ
Written By Eve on Wednesday, August 3, 2011 | 10:36 AM
சிறிலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசத்தில் தற்போதும் நிலவும் வெறுப்புத் தன்மையானது தொடர்ந்தால் தென்சூடானுக்கு அடுத்ததான 194 ஆவது நாடு இலங்கையிலிருந்தே உருவாகும். இதனை எந்த வகையிலும் தடுக்க முடியாது போய்விடும் என பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.‘நீண்ட கால சமூக ஒற்றுமையை நோக்கிய எதிர்கால பயணம்’ என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் நந்ததாச கொதாகொடவின் 14 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல சர்வதேச நாடுகள் இன்று போர்க் கொடி தூக்கியுள்ளன.இந்த விடயத்தில் சிறிலங்கா அரசு பொறுப்புக் கூறும் தன்மையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. எதனையும் தட்டிக் கழித்தால் அது சிறிலங்கா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே அமையும். அத்துடன் இலங்கையிலிருந்தே 194 ஆவது நாடு உருவாவதனைத் தடுக்க முடியாத நிலையேற்படும். அவ்வாறானதொரு நிலையேற்பட்டால் சிறிலங்காவானது சீனாவின் காலனித்துவ நாடாகவே தோற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment