Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மலேசியாவுக்கு அகதிகளை அனுப்புவதை தடுத்துநிறுத்த ஆஸி. நீதிமன்றம் உத்தரவு

மலேசியாவுக்கு அகதிகளை அனுப்புவதை தடுத்துநிறுத்த ஆஸி. நீதிமன்றம் உத்தரவு

Written By Eve on Tuesday, August 9, 2011 | 10:32 AM

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் புகலிடம் கோரி வந்தவர்களை மலேசியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியொன்றை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. அகதிகள் குழுவொன்றின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் மலேசியாவுக்கு அகதிகளை இடமாற்றுவது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டனர். இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலேசியாவுக்கு அகதிகளை அனுப்புவது தொடர்பில் அலட்சியம் செய்ய முடியாத தீவிர கேள்வியொன்று உள்ளதாக தெரிவித்து இந்த விவகாரம் தொடர்பில் இம்மாத இறுதியில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் வரை மலேசியாவுக்கு அகதிகளை இடமாற்றுவதை நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது அவுஸ்திரேயா எதிர்வரும் 4 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் 800 அகதிகளை மலேசியாவுக்கு அனுப்புவது தொடர்பில் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த உடன்படிக்கையின் கீழ் மலேசியாவிலிருந்து 4000 அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவுள்ளது. மனித உரிமைகள் உடன்படிக்கைகள் பலவற்றில் கைச்சாத்திடாத நாடாக விளங்கும் மலேசியாவில் அகதிகள் தவறாக நடத்தப்படுவது வழமையாகவுள்ளதாக இந்த உடன்படிக்கையின் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து பிடிபட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள் குழுவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்கான மேற்படி 800 அகதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

அகதிகளது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் காலத்தில் அவர்களை தடுத்து வைப்பதற்கான சர்ச்சைக்குரிய தடுப்பு நிலையமாக கிறிஸ்மஸ்தீவு அகதிகள் தடுப்பு நிலையம் விளங்குகிறது.

அங்கு நூற்றுக்கணக்கான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட 800 அகதிகளில் 42 அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜரான மனித உரிமைகள் சட்டத்தரணி டேவிட் மான் அவுஸ்திரேலியாவின் அகதிகளை இடமாற்றும் நடவடிக்கை சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி கென்னத் ஹேன், மலேசியாவுக்கு அகதிகளை இடமாற்றுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உத்தரவிட்டார்.

இந்த அகதிகளை இடமாற்றுவதற்கான உடன்படிக்கை ஆட்கடத்தலை வர்த்தகமாக மேற்கொள்பவர்களின் நடவடிக்கைகளை முறியடிப்பதை இலக்காகக் கொண்டது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் வலியுறுத்தி வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது ஈரான், ஈராக், வியட்நாம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6000க்கு மேற்பட்ட அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். a

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger