இலங்கை வைத்தியர் பிரித்தானியாவில் காம லீலை
Written By Eve on Tuesday, August 9, 2011 | 10:33 AM
பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யவும் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இலங்கை வைத்தியரான பிரியந்த கந்தனாராச்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்.மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்கலாச்சார சிக்கல்கள் என்ற பார்வையில் இவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.1994ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியராக பட்டம் இவர் மீதான துஷ்பிரயோக வழக்கு நேற்று மஞ்சஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது தமக்கு நேர்ந்த அவலங்களை இருகர்ப்பிணிப் பெண்களும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது நோக்கம் பாலியல் நோக்காக இருந்ததாகவும் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை பாதிப்புக்குள்ளாகிய தாதியரும் இதன்போது சாட்சியமளித்துள்ளார்.இந்நிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இலங்கை வைத்தியர் மறுத்துள்ளார். இதனை அடுத்து வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment