Headlines News :

Meenakam News World

Home » , , , » மீண்டும் எகிறும் இலங்கையின் பணவீக்கம்

மீண்டும் எகிறும் இலங்கையின் பணவீக்கம்

Written By Eve on Thursday, August 11, 2011 | 9:48 PM

மீண்டும் எகிறும் இலங்கையின் பணவீக்கம்

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில், கடந்த யூலை மாதத்திற்கான பணவீக்கம் ஏழு புள்ளி  ஐந்து சதவீதம் என அதிகரித்துள்ளது. இதுவே முன்னைய மாதத்தில் எட்டு புள்ளி ஒரு சதவீதம் எனக் குறைவாகக் காணப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தினைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதற்கு உணவு அல்லாத பொருட்களின் விலைகளில் (1.4%) ஏற்பட்ட அதிகரிப்பே காரணம். எனினும் உணவு மற்றும் மென்பாணங்களின் விலைகள் கடந்த மாதத்தில் சற்று வீழ்ச்சி (0.8%) கண்டுள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.
 
இதேவேளை ஆசிய நாடுகளில் இலங்கையின் பணவீக்கமானது தற்போது உயர்வாகக் காணப்படுகின்ற போதும், இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான சதவீதத்தினையே கொண்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger