Headlines News :

Meenakam News World

Home » , , , , , » நேற்றிரவு அம்பாறையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்

நேற்றிரவு அம்பாறையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்

Written By Eve on Thursday, August 11, 2011 | 10:38 PM

அம்பாறை சம்மாந்தறை பிரதேசத்தில் மர்மமனிதர் இருவரை பொலிஸார் காப்பாற்ற முற்பட்டார்கள் என பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேற்றிரவு 8 மணியளவில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து கைகலப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் சம்பவதினம் இரவு 8 மணியளவில் பெண்ணொருவர் குளித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த மர்மமான இருவர் அப்பெண் மீது சேட்டையில் ஈடுபடமுற்பட்ட போது அப்பெண் கூச்சலிட்டு கத்தியதையடுத்து அவ் இருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர்.

இதனை அவதானித்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோசமிட்டனர். இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் வீழ்ந்தன இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் இவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலகத்தை அடக்க முற்பட்டனர்.

இவ்சம்பவத்தையடுத்து பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதையடுத்து நிலமை சுமுகநிலைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதேச்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger