வடமராட்சி கிழக்குப் பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா இராணுவ தரப்பு முழுமையாகக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றது.மருதங்கேணி, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, உடுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட காணிகளையே சிறிலங்கா இராணுவம் அபகரிக்க திட்டமிட்டுள்ளது.இந்தப் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்ற படையினர் குறிப்பிட்ட இடங்கள் தங்களுக்குத் தேவைப்படுவதாகவும் எனவே, அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திச் சென்றுள்ளனர்
படையினரின் எச்சரிக்கை காரணமாக மீள்குடியேறிய இந்தப் பிரதேச மக்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு முகங்கொடும் நிலையில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment