Home »
அமைச்சர்
,
இருண்டயுகமாக
,
கொடுக்காவிடில்
,
தீர்வு
,
மாறும்:
,
மீண்டும்
» தீர்வு கொடுக்காவிடில் மீண்டும் நாடு இருண்டயுகமாக மாறும்: அமைச்சர்
தீர்வு கொடுக்காவிடில் மீண்டும் நாடு இருண்டயுகமாக மாறும்: அமைச்சர்
Written By Eve on Wednesday, August 10, 2011 | 6:15 AM
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத ரீதியான யுத்தத்தில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றதாகக் கூறிக் கொண்டாலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களது மனதை வெற்றி கொள்ள அது தவறிவிட்டது என சிறிலங்காவின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான ரெஜினோல்ட் குரே குற்றஞ்சாட்டியுள்ளார்.தனியார் சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்க யார் காரணம் என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கான முழுப் பொறுப்பையும் சிங்கள அரசு தலைமைகளே ஏற்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இது நாம் விட்ட பாரிய தவறு.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக, நிலையான, நீதியான தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு மீண்டும் பழைய நிலைக்கே செல்ல வேண்டி வரும். தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ராஜதந்திர ரீதியாகவும் சிந்தித்து முடிவுகள் எட்டப்பட வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது கால அவகாசம் விதிக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியதொரு விடயம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment