ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்திரீகர்கள் தமிழகத்தில் கடந்த வாரம் தக்கப்பட்டபோது அரசியல் வானில் அதனை அக்கினிப் பிளம்பாகக் காட்ட ஸ்ரீலங்காலின் அரசும் அதன் அடிவருடிகளும் முனைந்த கதை எல்லோரும் அறிந்ததே.
அந்தச் சம்பவத்தின் பின்னணியில் எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை என்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்திலும், தமிழ்மக்கள் மத்தியிலும், சிங்கள இனத்துடன் ஏற்படும் அனைத்திற்கும் அரசியல் சாயம் ப+சிப்பழக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசு உண்மைச் சம்பவத்தை மூடிமறைத்து அதில் அரசியல்லாபம் தேட முனைகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ள செய்தியின்படி, தமிழகத்திலுள்ள பௌத்த விகாரையினைத் தரிசிக்க ஸ்ரீலங்காவில் இருந்து சிங்களவர்கள் சென்று வருவது வழமையாகும். இதன் அடிப்படையில் கடந்த வாரம் சென்னை சென்ற யாத்திரீகர் குழுவில் உள்ளஇளைஞன் அங்கு சென்ற தமிழகத்து இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டள்ளார்.
மேற்படி இளம்பெண் தனது காதலனின் வருகைக்காகக் காத்திருந்தவேளை, அவளை ஒரு விலைமாது என்றும், உனக்கு வேண்டிய அளவு பணம் தருவதாகவும் தன்னுடன் வருமாறும் வற்புறுத்தியுள்ளார். மேற்படி பெண், தான் அப்படியான பெண் அல்ல என்று எத்தனை தடவை கூறியும் அந்தச் சிங்கள வாலிபர் கேட்கவில்லை.
அந்தவேளை அங்கே வந்த மேற்படி பெண்ணின் காதலனும், அவனது நண்பர்களும் அவரைச் சமாதானமாக அனுப்ப முற்பட்டபோது சிங்கள வாலிபர் மேலும் வன்முறையான (இத்தனை ஆண்களுடன் போகிறாய், என்னுடன் தனியாக….) வார்த்தைகளை அந்தப் பெண்ணை நோக்கி பேசியிருக்கிறார்.
ஆத்திரம் அடைந்த காதலனும் அவனது நண்பர்களும் சிங்கள வாலிபனுடன் வாய்த் தர்க்கத்திலும் பின்னர் கைகலப்பிலும் ஈடுபட்டபோது கூடவே வந்திருந்த சிங்கள யாத்திரிகர்கள் அவருக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டபோது, அவர்கள் ஸ்ரீலங்காவின் சிங்கக் கொடி அச்சிடப்பட்ட ரீ செட் அணிந்திருந்ததைக் கண்டு மேலும் கொதிப்படைந்த தமிழகத்து இளைஞர்கள், இலங்கையில்த்தான் தமிழிச்சிகளைக் கொடுமைப்படுத்திக் கற்பழித்துச் சீரழித்தீர்கள், இங்கும் வந்துவிட்டீர்காளா என்று கேட்டு மேலும் பலர் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதற்கு சென்னையில் உள்ள தூதாராலயத்து ஊழிராகச் செயற்படும் கிஸ்ணமூர்த்தியும், யாத்திரீகர் கூட்டமும், நடந்த சம்பவத்தை மூடிமறைத்துப் பேனைப் பேயாக்கிப், பேயைப் பெருமாளாக்கி அரலியல் அரங்கில் உலாவ விட்டுள்ளனர். சுய கௌரவத்திற்காகவும், தாய்தந்தையருக்குத் தெரியாமலும் தன் காதல் விவகாரத்தை மூடி மறைக்க முனைந்த காதல் ஜோடிகள் மேற்படி விசயத்தைப் பற்றி ஏதும் இதுவரை வெளியிடாததுடன், பெயர் சொல்ல விரும்பாத அவர்களின் நண்பர்கள் வாயிலாக உண்மை வெளிவந்துள்ளது.
(தமிழகத்தல் இருந்து கோதன்டராமன் செந்தில்வேல் – சைதாப்பேட்டை, தமிழ்நாடு)
No comments:
Post a Comment