பொன்சேகாவை விடுவிக்க மஹிந்தர் சம்மதம்
Written By Eve on Monday, August 1, 2011 | 10:48 AM
சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தான் விடுதலை செய்யத் தயாராகவிருப்பதாகவும் அதற்கு முன்னராக அவரது மனைவி அனோமா பொன்சேகாவைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குவான மாலுவாவ சோபித்த தேரோவைக் கேட்டிருந்தார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோபித தேரரைச் சந்திக்கச் சென்ற போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.சரத் பொன்சேகாவைச் சிறை வைத்திருப்பதானது தனது மனட்சாட்சிக்கு நல்லதொரு காhரியமாகத் தெரியவில்லை. அவரை விடுதலை செய்யவே நான் விரும்புகிறேன். ஆனால், அவரது மனைவி அனோமா பொன்சேகாவது என்னைச் சந்தித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். அத்துடன் அவர் இதனை விரும்பவும் வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் நீங்களே செய்து தர வேண்டும் தேரரே.. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சோபித்த தேரரிடம் கேட்டிருந்தார்.ஜனாதிபதி மஹிந்தவின் இந்த வேண்டுகோளை ஏற்று உடனடியாகவே சரத் பொன்சேகாவின் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறியுள்ளார்.அதற்கு அனோமா பொன்சேகா அளித்த பதில் இதுதான்,எனது கணவர் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஜெனரல் யாருக்கும் அடிபணிந்து போகவும் மாட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் மனதளவில் சோர்ந்து போகவில்லை. உங்கள் கோரிக்கையை எனது கணவரிடம் கூறினால் என்னை நன்கு திட்டி வெளியே போகச் சொல்லி விடுவார் தேரரே என அனோ பதிலளித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment