சமூக ஆர்வலரான பட்டாணி ராசிக்கின் படுகொலையின் பின்னணியிலுள்ள அரசியல் கரங்கள் குறித்துப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷம் எழுப்பினர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புத்தளம் பிரதேசத்தின் முக்கிய பகுதிகளிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டிருந்ததுடன் வாகனங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
மனித உரிமை ஆர்வலரான பட்டாணி ராசீக் கடந்த 2010.02.11 ஆம் திகதி தொழில் நிமித்தம் பொலன்னறுவை பிரதேசத்திற்கு சென்ற போது காணாமல் போயிருந்தார். பின்னர் அவரது சடலம் கடந்த வாரம் வாழைச்சேனையில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரண்டு கோடி ரூபா கப்பம் கேட்டே இவர் கடத்தப்பட்டிருந்தார். ஆனால், அந்தக் கப்பத் தொகை செலுத்தாத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, பட்டாணி ராசிக்கின் கொலை தொடர்பில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment