இந்திய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கு எதிராக அதிமுக எம்.பிகள் இன்று கோசங்களை எழுப்பினர்.சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினரை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் வரவேற்று உரையாற்ற ஆரம்பித்தபோது எஸ்.செம்மலை மற்றும் முனிசாமி தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்.பிகள் ‘வெட்கம் வெட்கம்’ என கோசம் எழுப்பினர்.மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.விசேட வெளிநாட்டு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் இந்திய சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகிலுள்ள விசேட பகுதியொன்றில் அமர்ந்திருந்தனர்.ஏனைய கட்சிகளின் எம்.பிகள் மேசையை தட்டி இஙல்கை எம்.பிகளுக்கு வரவேற்பு தெரிவித்த நிலையில் அதிமுகவின் ஏறத்தாழ 9 எம்.பிகளும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பியான பி. லெனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்ள முயன்றார். அவர் சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நடந்து சென்றபோதிலும் அவரது கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவினால் ஆசனத்தில் அமருமாறு பணிக்கப்பட்டார்.இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஆத்திரமடைந்த சபாநாயகர் மீரா குமார், விருந்தினர்களுக்கு மரியாதை காட்டுமாறு அதிமுக எம்.பிகளிடம் கோரினார்.
இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழுவினர் இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பின்பேரில் 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
Home »
ஆர்ப்பாட்டம்
,
இந்திய
,
இலங்கை
,
எதிராக
,
தூதுக்குழுவினருக்கு
,
நாடாளுமன்றில்
» இலங்கை தூதுக்குழுவினருக்கு எதிராக இந்திய நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்
இலங்கை தூதுக்குழுவினருக்கு எதிராக இந்திய நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்
Written By Eve on Monday, August 1, 2011 | 3:06 AM
Labels:
ஆர்ப்பாட்டம்,
இந்திய,
இலங்கை,
எதிராக,
தூதுக்குழுவினருக்கு,
நாடாளுமன்றில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment