புலம் பெயர் மக்கள் இன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு ஊன்று கோலாக செயல்பட்டு வருகின்றமை சிறீ லங்கா அரசுக்கு பெரும் தலையிடியாகவும் உலகின் கண்களுக்கு எங்கள் போராட்டம் முடியவில்லை என்று உணரவைக்கவும் விளங்குவதை உலக அரங்கில் காண்கிறோம் . ஆயுத போராட்டத்தின் பணபலத்தை வாரி வழங்கிய அதே மக்கள் 2009 காலபகுதியில் பெரும் குழப்பமுற்று புலிகளின் சில இரண்டாதர தலைவர்களின் குழப்பமான செயல்பாடுகளால் மௌனம் காத்து வந்தாலும் தமது போராட்ட உணர்வை பல்வேறு வடிவங்களில் தனிபட்டவர்களாக அல்லது சில அமைப்புகளாக செய்து வந்து உள்ளனர். பின்னர் ஏற்பட்ட பல குழப்பங்கள் மக்களின் பங்கெடுப்பை குறைத்து வந்து உள்ளதை அவதானிக்கலாம். பலர் தலைவர் வந்தால் மட்டும்தான் இனி போராட்டங்களுக்கு சக்தி வரும் என்று விரக்தியுற்று வீட்டுக்குள் இருக்கும் அளவுக்கு புலம் பெயர் மண்ணில் செயல்பாடுகள் நடைபெற்று வருவதை காணலாம்.
அண்மையில் பிரத்தானிய தமிழர் பேரவை நடாத்திய கறுப்பு ஜூலை நிகழ்வில் வெறும் இருநூறு பேர்கள் கலந்து கொள்ளும் அளவுக்கு இன்றை லட்சம் தமிழர் உள்ள நாட்டில் போராட்ட பங்களிப்பு குறைந்து உள்ளதை கவலையோடு பார்க்கமுடியும் . அதே போல் தமிழ் இளையோர் அமைப்பின் சிறீ லங்கா கிரிக்கெட் அணிக்கெதிரான போராட்டங்களிலும் வெகு குறைவான மக்கள் பங்களிப்பு இருந்தமையால் சில சிங்களவர்கள் இணைந்து எதிர்ப்பு காட்டும் அளவுக்கு குறைவாகவே உள்ளது . அதே போல நாடு கடந்த அரசின் கிரீன்போர்ட் நகர நினைவு நிகழ்வுக்கு வந்திருந்த பேச்சாளர்கள் மேடயில் பகிரங்கமாகவே வேதனைப்படும் அளவுக்கு மக்கள் பங்களிப்பு இருந்தது .இது இன்றைய பிரித்தானியாவின் தமிழர் போராட்ட நிலை. வேறு நாடுகளில் இதைவிடவும் கேவலமான நிலைமை. இதனால் மக்கள் உணர்வு குறைந்து விட்டதாக கூறமுடியாது . மக்கள் தங்கள் தனிப்பட்ட செயல்பாடுகளை செய்து கொண்டுதான் உள்ளனர் . ஆனால் எந்த ஒரு அரசியல் செயல்பாட்டிலும் மக்களை வரவழைக்கும் வகையில் தலைமைகள் செயலப்டவேண்டும் . பெருமபாலனா மக்கள் இந்த தலைமைகள் அமைப்புகள் சரியான வகையில் செயல்படும் பொது அதன் பின்னல் வருவார்கள் ஒழிய தாமாக போராட இறங்குவார்கள் என நினைப்பது தவறு. சாதாரண மக்கள் தொகையில் சிறிய ஒரு பகுதிதான் ஆர்வத்தோடு செயல்படும் , இந்த இன உணர்வாளர்களையே நாம் சகல போராட்டங்களிலும் காண்கிறோம் . பிரித்தானியாவை பொறுத்தவரை ஒரு ஐநூறுக்கும் குறைவான தமிழர்கள் மட்டுமே எதோ ஒரு அமைப்பில் செயல்படுகிறார்கள் மீதி மக்கள் பார்வையாளர்களாக இருப்பதையே காண முடிகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை காலத்தில் தாமாகவே வந்த மக்களும் பின்னர் நடைபற்ற வட்டுகோட்டை தேர்தல் நாடு கடந்த அரசின் தேர்தல் போன்றவற்றில் ஏதோ ஒரு புதிய போராட்டம் தலைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேடுத்தவர்களும் இன்று வருவதில்லை. இதற்கு எல்லாம் வராத கூட்டத்தின் பலத்தை மகிந்தவின் விஜயத்தில் மக்கள் பலத்தை காட்ட முற்பட்டமையை பெரும் மாற்றமாக கொள்ளலாம். எந்த ஒரு அமைப்பும் சரியாக முன்னேடுக்காமலே தனிப்பட்ட முயற்சிகளாகவே பல முன்னெடுப்புகள் அந்த நேரத்தில் நடைபெற்றதை காணலாம். இதற்கு பிரித்தானியாவில் சகல அமைப்புகளும் இணைந்து செயலபட்டமையும் ஒரு பெரும் மாற்றமே.
இன்று மக்கள் பொது நிகழ்வுகளுக்கு வராமைக்கு முக்கியமான காரணம் இன்று பிரதானிய தமிழ் அமைப்புகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளே என்பது மறுக்க முடியாத உண்மை. அதைவிட சில இணையதளங்களை உருவாக்கி தங்களை தாங்களே ஊடகவியலாளர் என்று கூறிகொள்ளும் இணையங்களும் அமைப்புகளை குறை கூறி அல்லது ஆதரிக்காமல் அல்லது குழப்பும் வகையில் வெளியிடும் செய்திகள் மக்களை சலிப்படைய செய்து விடுகின்றன . இன்று எந்த அமைப்பு நடாத்தும் நிகழ்வுகளிலும் ஒரு நூறு தெரிந்த முகங்களையே காணமுடிகிறது. ஜனநாயக முறை கொண்ட ஒரு வடிவமைப்பே இன்று மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவை படுகிறது . ஆனால் தமிழர் அரசியலில் ஜனநாயகம் என்ற வார்த்தை ஆயுத போராட காலத்தில் எடுபடாமல் போனதனால் இன்று பலருக்கு இதை ஏற்று கொள்ள முடிவதில்லை . இதுவரை காலமும் அமைப்புகளாக இயங்கியவர்கள் இன்று புதிய அரசியல் பாதையில் பயணிக்க தயாராக இல்லை . வேறு யார் வந்தாலும் அதை தங்களின் இதுவரை நடாத்தி வந்த ஒரு கட்டுகோப்பான குறிபட்ட வட்டத்துக்குள் இருந்த தலைமைக்கு வரும் அபாயமாக சிந்திக்க தலைப்பட்டு விடுகின்றனர். இதில் தமிழீழ போராட்டம் திசை பாரிவிடுமோ என்கின்ற அச்சமும் இவர்களுக்கு உண்டு என்பதயும் காணக்கூடியதாக உள்ளது . இவர்கள் அச்சபடுவது போல இங்கே இனி யாரும் எமது பயணத்தின் திசையை மாற்ற முடியாத அளவுக்கு எமது போராட்டம் வளர்ந்து விட்டது .
இன்று ஒரு விடுதலை போராட்டம் தமிழீழ கொள்கைக்கு எதிராக செயல்படும் யாவரையும் வாயடைக்க செய்து விட்டது. ஜனநாயக வழியில் மக்கள் போடும் வோட்டுகள் மூலம் தமிழீழ கொள்கைக்கு எதிரானவர்கள் அவர்கள் விடுதலைபுலிகளின் முன்னாள் தளபதிகள் என்றாலும் கூட , இங்கு இடம் இல்லை என கூறி நிற்கிறது . இந்தியாவின் தி மு க தோல்வியும் ஈழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியும் புலம் பெயர் மண்ணில் பிரிந்து நிற்கும் தமிழ் அமைப்புகள் தமிழ் ஈழ கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டிய நிலமையும் ஒரு பாரிய தியாகத்தின் விளைவுகள் . அதனால் இன்று நாம் உலகின் முன்னால் தமிழீழ மக்களின் ஜனநாய வழியில் தேர்ந்தெடுக்க படும் ஒரு செயல்பாட்டை நிகழ்த்தி காட்டி அதன் மூலம் தமிழீழ மக்களின் ஏகோபித்த முடிவை உலகுக்கு நேர்மையாக எடுத்து கூற வேண்டி உள்ளது . அந்த எதிர் பார்ப்பின் விளைவே நாடு கடந்த அரசின் உருவாக்கம் . துரதிஷ்டவசமாக இதன் முதல் தேர்தலிலேயே தமிழர்கள் கள்ள வாக்கை இட்டு ஒரு கறையை ஏற்படுத்தி விட்டனர். அதனால் ஏற்பட்ட வாத பிரதிவாதங்கள் இன்று எம்மை பிரித்து அணிகளாக செயல்பட வைத்துவிட்டது . உலகின் முன்னால் பிரிவுகளாக சென்று எம்மை அறிமுகபடுதவும் தொடக்கி விட்டோம். இப்படி அணிகளான பொது பெரும்பான்மை மக்கள் யார் சரி யார் பிழை என புரியாமல் பங்கேடுக்காமலே இருந்து விடுகின்றனர். பெரும் பான்மை மக்கள் இந்த தலைவர்கள் ஒரு ஒற்றுமைக்கு வரட்டும் என பார்த்துகொண்டு இருகின்றனர் . ஒரு நிகழ்வுக்கு போனால் அங்கே ஒரு அணியை காணலாம் மறு அணியை காண முடியாது என்கின்ற நிலைமையும் ஆனால் எல்லா நிகழ்வு முடியும் போதும் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உரக்க கத்துவதுவும் எம்மை சிந்திக்க வைக்கிறது . இலக்கு ஒன்று என்றால் ஏன் இணைய முடியாது என்று கேட்கவும் வைக்கிறது . நாடு கடந்த அரசு தவிர மீதி அமைப்புகள் ஒரு சில தலைவர்களின் கைக்குள் மட்டுமே இயங்குவதனால் அந்த தலைவர்கள் சரியான முடிவை எடுக்காத இடத்தில் பிளவுகள் மேலும் வலுகின்றன. தொண்டர்கள் அதை தட்டி கேட்காமல் இருக்கும் பொது அந்த அமைபுகளிட்கு இருந்த மக்கள் பலம் குறைகிறது . ஒற்றுமைப்பட ஏன் மறுக்கிறீர்கள் என மக்கள் வினவும் அளவுக்கு நிலைமை இன்று சென்று விட்டது . நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளை முதலில் நாங்கள் கவுரவித்து எங்கள் எம் பி கள் என்ற ஒரு கருத்தை உருவாகினால்தானே உலகம் அவர்களை ஏற்றுகொள்ளும் ? . ஆனால் இங்கே வேறு அமைப்புகள் நாடு கடந்த அரசை தவிர்க்க முயற்சி செய்கின்றன .
முடிவாக ஒன்று பட மறுபத்னால் பிரித்தானியாவில் தமிழீழ போராட்டம் வெறுமனே ஐந்து ஆறு பேர் பங்கெடுக்கும் நிகழ்வாக மாற போகின்றது என்பதை உணர வேண்டும் . இதற்கு பொறுப்பை முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் உணர்ந்து ஒரு முக்கிய முடிவை விரைவாக எடுத்து இனி வரும் காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசை இணைத்து நிகழ்வுகளை முன்னெடுக்க வரவேண்டும் ! நீ பெரிது நான் பெரிது என்று வாழாமல் நாடு பெர்தேன்று வழுவும் என பாலர் பாடம் பலமுறை எடுத்தாகிவிட்டது , எழுதி அலுவலக சுவர்களில் வைக்கப்பட்டும் விட்டது ஆனால் செயலில் காணோம் ! இதை வாசிக்கும் நீங்கள் இந்த அமைப்புகளில் தொடர்பு இல்லவர் என்றா நீங்கள் கொடுக்கும் அழுத்தம் இந்த அமைப்புகளில் தலைமைகளின் மனதை மாற்ற கூடும் . நாடுகடந்த தமிழீழ அரசு , பிரதானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு , ஆக்ட் நவ் மற்றும் பிரதானிய தமிழர் ஒன்றியம் என்பன இணைந்து இனி வரும் காலங்களில் ஒரு முன்மாதிரியான செயல்பாட்டை காட்டும் என்பதே இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு. தமிழீழ பயணத்தை விரைவு படுத்த முதல் படியை இன்னமும் கடக்க முடியாமல் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்துக்காக மக்கள் ஏங்கி தவிக்கும் நிலைமையை நிச்சயமாக ஒரு சில தனி மனிதர்களால் மாற்ற முடியும் . அந்த முதல் படி , பிரதானிய தமிழரின் ஒருங்கிணைந்த பயணம் , தமிழீழ பயணம் !
No comments:
Post a Comment