Headlines News :

Meenakam News World

Home » , , , , , » உயர் பாதுகாப்பு வலயத்தில் உதயன் ஆசிரியர் தாக்கபட்டது எவ்வாறு?

உயர் பாதுகாப்பு வலயத்தில் உதயன் ஆசிரியர் தாக்கபட்டது எவ்வாறு?

Written By Eve on Sunday, July 31, 2011 | 5:28 AM

பாதுகாப்பு உயர் வலயங்களும் பாதுகாப்பு கெடுபிடிகளும் நிறையவே காணப்படும் வடக்கின் யாழ். குடாவில் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் எவ்வாறு தாக்கப்பட்டார் என மனித உரிமைகள் மற்றும் ஊடக அமைப்புகள் சிறிலங்கா அரசை நோக்கிக் கேள்விக் கணை தொடுத்துள்ளன.

இது தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான அமைப்பின் செயலாளர் நாயம் கலாநிதி ஜயரத்ன ராஜரத்ன இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுதந்திர சுதந்திர ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலாகவே கருத வேண்டும். மிகவும் பாதுகாப்புக் கெடிபிடிகள் கொண்ட பிரதேசத்தில் வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, உதயன் செய்தி ஆசிரியா் குகுநாதன் மீதான தாக்குதல் தொடா்பில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (வயது59) கடமை முடிந்து செல்லும்போது இனம்தெரியாத நபர்களினால் அவரது வீட்டுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டமை கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடந்து மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பல சந்தேகங்களை தோற்று வித்துள்ளது.

யுத்தத்துக்கு பின்னரான காலகட்டங்களில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரம், ஊடக ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் ஊடகவியலாளர்கள் மீது அச்சறுத்தல் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர்கள் மீதான எந்த ஒரு தாக்குதல்கள் தொடர்பாகவும் இதுவரை பொலிஸார் உரிய விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்படவும் இல்லை. சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் நேர்மையான முறையில்

பொலிஸார் விசாரணை நடத்தவில்லை.
உதயன் நாளேட்டின் செய்தியாளர் செ.கவிகரன் கடந்த மே மாதம் 28ஆம் திகதி இனம்தெரியாத குழுக்களினால் தாக்கப்பட்டிருந்தார். ஆனால் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ் ஊடகத்துறை எவ்வாறான அச்சறுத்தல்களை எதிர்நோக்கி இருந்ததோ அவ்வாறான.

 பிரச்சினைகள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தொடர்கிறது.

வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவதை விரும்பாத படைத்தரப்பு இராணுவ நிர்வாகத்தை தொடருகின்றது என்ற தொனியில் தமிழ் ஊடகங்கள் செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றன. உண்மை நிலைமைகளை அல்லது மக்களின் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவது ஊடகங்களின் கடமை.

அது ஊடகங்களின் ஜனநாயக உரிமை. அதனை கட்டுப்படுத்த எந்த ஒரு ஜனநாயக அரசுகளுக்கும் கூட உரிமை இல்லாத நிலையில் படைகளின் உதவியுடன் செயற்படுவதாக கூறப்படும் ஆயுதக்குழுக்கள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுக்க முடியும்?

எனவே ஊடகத்துறை அமைச்சின் மீது தமிழ் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமானால், அரசாங்கம் கூறுகின்ற ஊடக ஜனநாயகம் உண்மையானால்; குகநாதன் மீதான தாக்குதலுடன் தொடர்புள்ள நபர்கள் அல்லது குழக்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தன்டனை வழங்கப்பட வேண்டும் என ஒன்றியம் வலியுறுத்துகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger