Headlines News :

Meenakam News World

Home » , , » கைத்துப்பாக்கியுடன் மட்டக்களப்பில் இருவர் கைது

கைத்துப்பாக்கியுடன் மட்டக்களப்பில் இருவர் கைது

Written By Eve on Saturday, July 9, 2011 | 10:12 PM

மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியான சத்துருக்கொண்டானில் கைத்துப்பாகியுடன் சென்ற இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது ஒருவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் வந்தாறுமூலை மற்றும் சந்திவெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் குறித்த இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger