தாம்நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் தமது விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியபோதிலும் இதுவரையில் இது தொடர்பில் எதுவிதநடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவேதம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுதமது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கும் வரை தமது உண்ணாவிரத போராட்டம் தொடரும்எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரனினுக்கும் சிறைக்கைதிகள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்தெரிவித்தார்.
அவர்களின் விபரம் வருமாறு
1. கட்டையல் லோகேஸ்வரன் (40 வயது)
விலாசம் : காந்திபுரம் செட்டிகுளம் வவுனியா
இவர் 01.07.2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்து புணர்வாழ்வளிக்கப்பட்டு பின்பு 15.01.2010 இல் விடுதலை செய்யப்பட்டார் அதன்பின் 3 நாள் கழித்து 18.01.2010 இல் மீண்டும் வவுனிய வெலிக்குளத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 4 பிள்ளைகளின் தந்தையாவார்.
2. பொன்னம்பலம் சிவகுமார் (30 வயது)
விலாசம் : தம்பனைக்குளம் முருங்கன்
கைதுசெய்யப்பட்ட திகதி : 02.03.2007
இவர் 2 பிள்ளைகளின் தந்தை
3. மரியதாஸ் மேர்வின் (25 வயது)
விலாசம் : 29ஃ7இ புனித செபஸ்தியார் வீதி பாசையூர்
கைதுசெய்யப்பட்ட திகதி : 17.10.2009
4. ரங்கசாமி நந்தகுமார் (27 வயது)
விலாசம் : வேப்பவெட்டுவான் பன்குடாவெளி மட்டக்களப்பு
கைதுசெய்யப்பட்ட திகதி : 20.09.2009
இவர் ஒரு குழந்தையின் தந்தை
No comments:
Post a Comment