Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மட்டக்களப்பு வங்கிக்கொள்ளை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வங்கிக்கொள்ளை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Written By Eve on Saturday, July 9, 2011 | 10:11 PM

மட்டக்களப்பு திமிலைத்தீவில் உள்ள மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அங்கு கடமைபுரிந்த ஊழியர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன

கடந்த மாதம் 28 ம் திகதி மக்கள் வங்கியின் இலச்சினை பொறிக்கப்பட்ட வானில் சென்ற ஐந்து பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக வைத்து வங்கியில் கொள்ளையிட்டுச்சென்றனர்.

இதன்போது சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான நகைகளும் சுமார் 37 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையர்களினால் கொள்ளையடித்துச்செல்லப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் விசேட பொலிஸ் குழு மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இதன்போது இடம்பெற்றுவந்த விசாரணையின்போது குறித்த வங்கியில் பியோனாக வேலை செய்துவந்த ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் மிக விரைவில் குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கொள்ளைச் சம்பவத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்படு வருகின்றது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger