சனல் 4 காணொளியில் காட்டப்பட்ட தனிப்பட்ட ஒருவர் பிரித்தானிய சட்டப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனினும் ஒரு அரசாங்கம் வழக்கு தொடரமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
சனல் 4 தொலைக்காட்சியிடம் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எல்லைப் பிரச்சினை குறித்த விடயங்களுக்காக மாத்திரமே அரசாங்கம் ஒன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு செல்லமுடியும்.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் யோசிக்குமானால், இலங்கை நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை பதிவுசெய்யலாம்.
இதனை தவிர சனல் 4 க்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் பிரித்தானிய ஒளிபரப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்யலாம் என்றும் சரத் என் சில்வா குறிப்பிட்டார்
No comments:
Post a Comment