Headlines News :

Meenakam News World

Home » , , , , , » ஜெயலலிதாவை கொழும்பு வருமாறு மஹிந்த அழைப்பு விடுக்கவுள்ளார்?

ஜெயலலிதாவை கொழும்பு வருமாறு மஹிந்த அழைப்பு விடுக்கவுள்ளார்?

Written By Eve on Saturday, July 9, 2011 | 7:34 AM

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மூலமே இந்த அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அழைப்பானது மிகவும் இரகசியமான முறையிலேயே விடுக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்பட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger