Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்

வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்

Written By Eve on Thursday, July 14, 2011 | 10:04 AM

வாளேந்திய நிலையில் இருந்ததால் தான் முத்திரைச்சந்தியில் இருந்த சங்கிலியன் சிலை இடித்து அழிக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவுக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே மாநகரசபை அதிகாரிகளால் இந்தச் சிலை நேற்று இடித்து அகற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை பாதுகாப்புடன் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இந்தப் பழமையான சிலை அழிக்கப்பட்டுள்ளது.

தென்பகுதியில் இருந்து வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் வாளேந்திய நிலையில் இருக்கும் சங்கிலியன் சிலை குறித்து வெளியிட்ட அதிருப்தியை அடுத்தே அதை அகற்றுமாறு மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பணித்துள்ளார்.

இந்தத் தகவலை யாழ்.மாநகர ஆணையாளரே வெளியிட்டதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் கூறியுள்ளது.

மிகவும் பழமைவாய்ந்த வாளேந்திய நிலையிலான சங்கிலியன் சிலை அகற்றப்பட்டு, அதேயிடத்தில் புதிய சிலையொன்று இந்திய சிற்பி ஒருவரால் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய சிலை வாளேந்திய நிலையில் இருக்காது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger