மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய 2011 ஜுன் மாதப் புள்ளிவிபரங்களில் இருந்து பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜன் மாதம் பிரித்தானியாவில் இருந்து 5188 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மே மாதமும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருகை 0.4 வீதத்தினால் சரிவடைந்திருந்தது.
மத்திய கிழக்கு, இந்தியா, கிழக்காசியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
எனினும் அவுஸ்ரேலியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொகை கடந்த மாதம் அதிகரித்துள்ள போதும் ஒப்பீட்டளவில் அது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.
Home »
ஐரோப்பிய
,
சிறிலங்காவைப்
,
சுற்றுலாப்
,
பயணிகள்
,
புறக்கணிக்கும்
,
மேற்கு
» சிறிலங்காவைப் புறக்கணிக்கும் மேற்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் மேற்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்
Written By Eve on Thursday, July 14, 2011 | 10:31 AM
Labels:
ஐரோப்பிய,
சிறிலங்காவைப்,
சுற்றுலாப்,
பயணிகள்,
புறக்கணிக்கும்,
மேற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment