Headlines News :

Meenakam News World

Home » , , , , , » சிறிலங்காவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் – சம்பிக்கவின் பதவி பறிப்பு?

சிறிலங்காவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் – சம்பிக்கவின் பதவி பறிப்பு?

Written By Eve on Thursday, July 14, 2011 | 10:32 AM

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர்கள் மீது ஈபிடிபி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குதல்களை நடாத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு கனடாவை தளமாகக் கொண்டு அரசியல் பத்திகளை எழுதிவரும் டி.பி.எஸ் ஜெயராஜ் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
 வேட்பாளர்களின் இல்லங்கள் மீது இரவுநேரங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அச்சுறுத்துகின்ற ஒரு செயலாகும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதால், இனிவரும் தேர்தல்களில் அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
மானிப்பாயில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் இல்லத்தின் முன் தலை துண்டிக்கப்பட்ட நாய் ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது. இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகர பிரதான வேட்பாளருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வளாகத்திற்குள் வடிகால் குப்பை கூழங்கள் வீசப்பட்டுள்ளன.
 
 கொடிகாமத்திலுள்ள கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வளாகத்திற்குள் சுடுகாட்டுச் சாம்பல் வீசப்பட்டிருந்தது. அத்துடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சண்டிலிப்பாய் பிரதேச பெண் வேட்பாளர் ஒருவரின் வீட்டு வளாகத்திற்குள் வாகன இயந்திர எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது.
 
கூட்டமைப்பு வேட்பாளர்கள் பலரின் வளாகத்திற்குள் கற்கள் வீசப்பட்டுள்ளன. சில வேட்பாளர்களின் மதில்களில் 'குறிப்பிட்ட வேட்பாளர் இறந்துவிட்டார்' என்ற தொனிப்பட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு எதிரான பல அச்சுறுத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அச்சம் மற்றும் காவற்துறையினர் மீதான நம்பிக்கைக் குறைவு போன்றவற்றால் இதில் சில சம்பவங்கள் தொடர்பாகவே காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
 
அளவெட்டியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் இது வரையிலும் இதில் தொடர்புபட்ட ஒருவரைக் கூட காவற்துறையினர் கைதுசெய்யவில்லை. வெள்ளைவானில் சிவில் உடையில் பிரயாணிக்கும் சிங்கள தமிழ் பேசுபவர்களே கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளில் இவ்வாறான இரவு நேர அச்சுறுத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
 
கூட்டமைப்பினர் தமது அரசியல் கூட்டங்களை நடாத்துவதற்கான பொருத்தமான வாடகை இடங்களை பெற்றுக் கொள்வதிலும் பெரும் சிரமப்படுகின்றனர்.

ஏனெனில் குறிப்பிட்ட வாடகை உரிமையாளர்கள், இவ்வாறு கூட்டமைப்பினருக்கு ஒத்தாசை வழங்குவதால் தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதால் இதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.

யாழ் உள்ளுராட்சித் தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள 16 ஆசனங்களில் 13 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் கூட்டமைப்பினருக்கு விழுகின்ற வாக்குகளை திசைதிருப்புவதற்கான முயற்சியாகவே இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்களைப் பட்டியல்படுத்தி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

யாழில் இடம்பெற்று வரும் கூட்டமைப்பிற்கு எதிரான தேர்தல் சம்பவங்களை சிறிலங்காவிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் மிக ஆர்வத்துடன் கண்காணித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger