Headlines News :

Meenakam News World

Home » , , , » யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் பௌத்த பிக்கு

யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் பௌத்த பிக்கு

Written By Eve on Thursday, July 14, 2011 | 10:33 AM

அனுராதபுர சிறி சம்போதி விகாரைக்கு நிதி சேகரிப்பதாக கூறி பௌத்த பிக்கு ஒருவர் யாழ்ப்பாணத்தில் தமிழ் வர்த்தகர்களிடம் அச்சுறுத்திப் பணம் பறித்து வருகிறார்.

யாழ்.வர்த்தகர்களிடம் முதலில் சாதுவாக பேசித் தம்மை அறிமுகப்படுத்தும் இவர், பின்னர் கடும் தொனியில் கட்டாயம் பணம் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார்.

சிறிலங்கா காவல்துறையின் அனுமதியுடனேயே தான் நிதி சேகரிப்பதாகவும், ஆயிரம் ரூபா தரவேண்டும் என்றும் கூறி பௌத்த பிக்கு மிரட்டிப் பணம் பறித்து வருவதாக வர்த்தகர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பணத்தைப் பெற்ற பின்னர் இவர வழங்கும் தனிச் சிங்களத்தில் அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டில், அனுராதபுர சிறிசம்போதி விகாரையின் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்துக்கான நிதி சேகரிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுராதபுர சிறிசம்போதி விகாரையின் விகாராதிபதி ஹேமரத்ன தேரரின் அதிகாரபூர்வ முத்திரையும் அந்தப் பற்றுச்சீட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger