சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் ஈட்டப்படும் கறுப்புப் பணத்தை, சட்டரீதியான பணமாக மாற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பயங்கரவாத நிதி தொடர்பான 2005ம் ஆண்டு 25ம் இலக்க சட்டம் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான 2006ம் ஆண்டு 5ம் இலக்க சட்டம் ஆகியன திருத்தப்பட உள்ளன.
விரைவில் இந்த சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கறுப்புச் சந்தை பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தற்போது காணப்படும் சட்டத்தில் சில குறைகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment