Headlines News :

Meenakam News World

Home » , , , , , » அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டமில்லை : சுசில் பிரேமஜயந்த

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டமில்லை : சுசில் பிரேமஜயந்த

Written By Eve on Sunday, July 17, 2011 | 10:41 PM

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டம் கிடையாது என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் மற்றம் ஏற்படுத்துவதற்கோ அல்லது அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கோ உத்தேசிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடகங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எந்தவொரு ஊடகத்திற்கும் தாம் தகவல்களை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, ஞாயிறுக் கிழமை சிங்கள ஊடகங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger