Headlines News :

Meenakam News World

Home » , , , , , » பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம் : ரணில் குற்றச்சாட்டு

பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம் : ரணில் குற்றச்சாட்டு

Written By Eve on Sunday, July 17, 2011 | 10:43 PM

தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பணத்தை சம்பாதித்துக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்குரனை பிரதேச்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பென்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய வகையிலான தேசப்பற்றாளர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர்களுக்கு தேசத்தின் மீதான பற்று இல்லையெனவும் பணத்தின் மீதே அதிக பற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசப்பற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கும் பலர் மெய்யாகவே தேசத்தின் மீது பற்றுடையவர்கள் அல்ல எனவும், சுயநலவாத அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் சிறிய தொகுதியை மக்கள் நலனுக்காக ஒதுக்கி ஏனைய பெரும் பகுதியை சொந்த தேவைக்காகப் பயன்படுத்தும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger