வரும் 23ம் நாள் யாழ் கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும்
தேர்தல்களம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் சவால்களும்
நெருக்கடிகளும் நிறைந்ததாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது.
இராணுவநெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசியத்தை
நிலைநிறுத்துவதற்காக இந்த மண்ணில் துணிந்து களம்
இறங்கியுள்ள த.தே.கூட்மைப்பு வேட்பாளர்கள் பற்றுறுதியோடு
தேர்தல் பணியை நிறைவு செய்துள்ள நிலையில் சிறிலங்கா
ஆரசாங்கம் தனது முழுப்பலத்தையும் வளத்தையும் ஒருங்கிணைத்து
யுhழ் கிளிநொச்சி நோக்கி நகர்த்தியுள்ளது.
நாமல்ராஜபக்ச உட்பட பல முக்கிய அமைச்சர்கள்
கிளிநொச்சியில் முகாமிட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்
யுவதிகள் இங்கே கிராமம் கிராமமாக பிரச்சாரப்பவனி வருகின்றனர்.
ஆரசதரப்பால் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது மிகமோசமான
மிரட்டல்கள் கடத்தல்கள் எரியுட்டல்கள் என தொடர்ச்சியான வன்முறைகள்
எம் வேட்பானர்கள் மீத கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
போரில் வலிசுமந்து நலிந்துபோயுள்ள எம்மக்கள் மீது அழுத்தங்களை
பிரயோகித்து அற்ப சொற்பசலுகைகளை காட்டி அபிவிருத்தி என்ற
மாய வலை விரித்து எம்மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்ய
அரசு கங்கணம்கட்டி நிற்கின்றது.
தலைகீழாக நின்றேனும் இந்த தேர்தலில் எமது வாக்குகளை
கொள்ளை அடித்து தன் கழுத்துக்கு வந்து விழுந்துள்ள
போர் குற்ற விசாரணைகளில் இருந்து எப்படியாவது அரசு
தப்பிப்பிழைக்க எத்தணிக்கின்றது.
மக்கள் முன்னர் ஒருபோதும் சந்தித்திராத காட்டுக்கத்தல்கள்
கூச்சல்கள் கூத்து கும்மாளங்கள் கேளிக்கைகள் ஊடான
ஆரசதரப்பு பிரச்சார முனனெடுப்புகளால் மக்கள் பதகளித்து
போயுள்ளனர்.தேர்தல் சட்டவிதிகளுக்கு முரனாக பிரச்சாரப்
புணிகள் நிறைவுற்ற போதும் ஈ.பி.டி.யும் சிங்கள கட்சிகளும்
இப்போதும் பெருமெடுப்பில் பரப்புரை செய்து வருகின்றனர்.
இராணுவத்தின் முழுஒத்துழைப்பும் ஆசியோடும் இங்கு
ஏல்லாமே நடக்கின்றது.
தேர்தல் பணிகளுக்காக முந்நூறுக்கும் மேற்பட்ட
ஆரச உத்தியோகத்தர்கள் இப்போது இங்கே
கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அன்பான எம் புலம்பெயர் உறவுகளே!
நாம் இன்று ஒரு நெருக்கடியான அரசியல்
களத்தை எதிர்கொண்டு நிற்கின்றோம்.
ஏம்மக்களுக்கான நீதியையும் எதிர்கால
வுhழ்வையும் தீர்மானிக்கின்ற தேர்தல்
களமிது.
தூயகத்தில் உள்ள உங்கள் உறவுளை
தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை எம்மண்ணில்
நிலைநிறுத்த வீட்டிற்கு வாக்களிக்க வேண்டுகோள்விடுங்கள்.
உரிமையோடு கேட்டுநிற்கின்றோம் .இது உங்களால்தான்முடியும்.
உங்களது இரத்த சொந்த பந்தங்களேர்டு வரும் இருபத்திநாலு
மணிநேரத்துக்குள் அவசர தொடர்பை ஏற்படுத்தி இந்த களப்பணியை
நிறைவேற்ற நீங்களும் இறங்கி சிங்கள அரசாங்கத்திற்கு தமிழன்
என்றும் தன்மானம் உள்ளவன் என்பதை முரசறையுங்கள்.
ஆவசரமான எங்கள் அழைப்பிற்கு விரைந்து கைகொடுங்கள்.
-வலிதந்தாரை தோற்கடிப்போம்- எம்
வுpதிவெல்லும் வாக்களிப்போம்-
நன்றி
சிவஞானம் சிறீதரன்
பா.உறுப்பினர்
த.தே.கூட்டமைப்பு
No comments:
Post a Comment