ஆனாலும் ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்படும், எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லையென்ற மனக் கவலைகளுண்டு.
ரும்பாலும் பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்களூடாகவோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாகவோ ஆட்திரட்டல் நடக்கின்றது.
சிலவேளைகளில் விவசாய அமைப்புக்கள், கிராமிய அமைப்புக்களுக்கும் ஆள்திரட்டும் பணி வழங்கப்பட்டு வருகின்றது.
மேடைக்கு முன்பதாக காட்சிக்கு வைக்கப்படும் உதவிப் பொருட்களுக்காக, அழைத்துச் செல்லப்படுபவர்கள் நள்ளிரவானாலும் கூட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், இடப்பெயர்வுக்குள்ளானவர்களென ஆட்கள் கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் இறுதியில் 100 ல் 5க்கும் குறைவானவர்களுக்கே உதவிகள் கிட்டுகின்றன.
எனினும் கூட்டங்கள் முடிந்த பின்னர், வழங்கப்படும் உதவிப்பொருட்கள் அந்தப்பகுதி வேட்பளார்களால் மீளப் பெறப்பட்டுவிடுவதாக முறைப்பாடுகளுண்டு.
தேர்தல் முடிவுற்று, வெற்றியீட்டிய பின்னரே, வழங்கியவை மீளக்கிடைக்குமென கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாணியில் சில இடங்களில் சத்தியமாக வாக்களிப்போமென்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment