Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » யாழ்ப்பாண உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் - நிமல்கா பெர்னாண்டோ வேண்டுகோள்

யாழ்ப்பாண உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் - நிமல்கா பெர்னாண்டோ வேண்டுகோள்

Written By Eve on Saturday, July 16, 2011 | 10:10 AM

சிறிலங்காவின் வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் பரப்புரைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பெண்களின் அரசியல் கல்வி நிறுவனம்,  சிறிலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளரான மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் செயற்படும் தமிழ்க் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியிடமிருந்து அக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றைத் தான் பெற்றுக் கொண்டுள்ளதாக, சிறிலங்காவின் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளரும், பெண்கள் அரசியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

"இறந்த நாயின் பகுதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர் பணியக வளாகங்களிற்குள் வீசப்பட்மையானது, இக்கட்சி உறுப்பினர்களை மிரட்டுகின்ற செயற்பாடாகும்" என நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமது தேர்தல் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெண்கள் அரசியல் கல்வி நிறுவனத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் மட்டும் இவ்வாறான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. யுத்தம் இடம்பெற்று காலத்திலும் அதன்பின்னரும் பல்வெறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக வடமாகாணம் அமைந்துள்ளது.
 
இப்பகுதியைச் சேர்ந்த 220,000 இற்கும் மேற்பட்டவர்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்து வாழ்வதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறிலங்கா அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் நிமால் பெர்னாண்டோ கோரியுள்ளார். ஆனால் தற்போதைய நிலைப்பாடானது பெண்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் நிமால்கா கவலை தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கு  பங்கம் விளைவிப்பதற்கான தெளிவான ஒரு அறிகுறியாக உள்ளதாகவும் பெண்கள் அரசியல் கல்வி நிறுவனத்தின் கடிதத்தில் மீள வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger