Headlines News :

Meenakam News World

Home » , , , , » கிழக்கில் பதுங்கி வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

கிழக்கில் பதுங்கி வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு

Written By Eve on Tuesday, July 12, 2011 | 11:30 PM

கிழக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகுதியொன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

36 ரீ56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

வாகரைப் பிரதேசத்தில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த பகுதியில் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

மிகவும் பாதுகாப்பான முறையில் மீள பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அண்மையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப ஆயுதக் கும்பல் இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger