22 வயதான கிரிஸ்டின் தனபாலன், 2009 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதியன்று கென்னடி வீதியில் உள்ள பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது மற்றும் ஒரு தமிழ் இளைஞர் குழு கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருககும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிரிஸ்டின் தனபாலன் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருந்தனர் எனினும் உண்மையான கொலையாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தநிலையில் உண்மையான கொலையாளியை இனங்காட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் கனேடிய டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று டொரன்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment